Tuesday, March 1, 2011

காலபேதம்

நாளும் நீளும் பகல்

இளவெப்பம் ஏற்றி வரும் காற்று

பருவத்திரிவின் அறிகுறியான கனமழை

கடந்தகாலத்தில் இழந்த ஆடையை

விரும்பி அணியும் மரங்கள்

மரங்களின் முரணாய் கல்லூரிப் பெண்கள்

மறித்திருந்த மாக்கள் யாவும் உயிர்த்தெழ

மறைந்திருந்த மக்கள் யாவரும் வெளிவர

இப்படியாக .. நான்,

இப்பிரபஞ்சத்தின் தகவல் கட்டமைப்பை வியந்து,

வசந்தத்தின் வருகையை நோக்கி !!

3 comments:

Guru said...

கார்த்தி...

கவிதை நன்றாக உள்ளது.. மரத்தையும் பெண்ணையும் ஒப்பு நோக்கியதும் சிறப்பு கூட... ;)

// மரங்களின் முரணாய் கல்லூரிப் பெண்கள் //

கல்லூரிப் பெண்களுக்கு பதிலாக பருவப் பெண்கள் என்றிருந்திருக்கலாம்.. மொத்த பருவப்பெண்களும் அப்படித்தானோ என்கிற அய்யம் எனக்கு.. :D

~குரு

Karthikeyan said...

நன்றி குரு !!
மொதல்ல சாலையோர பெண்கள்னு போட்டுருந்தேன் .. பிறகு கல்லூரிப் பெண்கள்னு மாத்திட்டேன் ..
ஏன்னா .. அவங்கள தான் .. இங்க தினமும் பாக்கமுடியுது:)

Anonymous said...

What is the difference between casino games and slots?
Slot games are the most popular types of 출장안마 casino https://febcasino.com/review/merit-casino/ games, and the majority are https://vannienailor4166blog.blogspot.com/ slots. 바카라 사이트 and the most commonly played slot poormansguidetocasinogambling games.