Thursday, March 21, 2013

எழுவோம்



பத்துகோடி  பேரிருந்தும் நமது ஒற்றைகருத்தை  
எடுத்தியம்பும் சித்தமான தலைமை  காணோம் !
திரைச்சித்திரம்  எனும் மாயைதனில்  தினம் நித்திரை கண்ட 
இளரத்தங்கள் யாவும், அறயுத்தம் புறிந்திட விளைந்தோம் !
அரசியல் விடுத்த; அறமும்,  பொருளும் மென் அறிவியலும்
அடிமைக்கு வித்திட்ட சூத்திரமென்பதை மறவோம்
இடைவந்த  மதம்விடுத்து , இடர்தரும் சாதி தகர்த்து 
நெறிகூரும் நம்  மொழியால் இணைவோம் !

Friday, February 10, 2012

மொழிவெறி

கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றிய எம் மொழியும் 
மகாகவி செவிபுகுந்த தேன்மொழியும் 
வாழ்த்த, வணங்க மட்டுமின்றி வசைபாட உகந்த செம்மொழியும் 
வடமொழியின் படையடுப்பில் பன்மொழியாய் திருயுமாயின்,
வழக்கிழப்புக்கு விதிவிலக்கில்லா மொழிமேல் வெறி - பிழை !

Tuesday, March 1, 2011

காலபேதம்

நாளும் நீளும் பகல்

இளவெப்பம் ஏற்றி வரும் காற்று

பருவத்திரிவின் அறிகுறியான கனமழை

கடந்தகாலத்தில் இழந்த ஆடையை

விரும்பி அணியும் மரங்கள்

மரங்களின் முரணாய் கல்லூரிப் பெண்கள்

மறித்திருந்த மாக்கள் யாவும் உயிர்த்தெழ

மறைந்திருந்த மக்கள் யாவரும் வெளிவர

இப்படியாக .. நான்,

இப்பிரபஞ்சத்தின் தகவல் கட்டமைப்பை வியந்து,

வசந்தத்தின் வருகையை நோக்கி !!

Sunday, January 16, 2011

புலம்பெயர்ந்த சிந்தனை !!


நளவெண்பா பயிலவேண்டாம் 

நன்னூல் நவிலவேண்டாம் 

குறளேதும் அறியவேண்டாம் 

பகுத்தறிவு பகலவேண்டாம்

அறிவியல் அறிய  வேண்டாம்

ஒழுக்கமேதும் இருக்கவேண்டாம் 

சமுதாய சிந்தனை வேண்டாம் 

மனிதமென்று ஒன்றும் வேண்டாம்

ஆனால் ...

கடல்தாண்டிய பணி வேண்டும்

கைநிறைய பணம் வேண்டும்

தமிழறிந்த  மடந்தை வேண்டும்

நம்வழி  மறக்க வேண்டும்

பிறர்வழி நடக்க வேண்டும்

வந்தேரியாய் வாழவேண்டும்

வளர்த்த மண்ணை வசைபாடவேண்டும்

இருந்தும் …

தம்மக்கள் தமிழ்பேச வேண்டும்

உடன்படா இவ்வாழ்க்கை விட்டு

என்றேனும் திருநாடு திரும்பவேண்டும் !!

Monday, November 29, 2010

காலாவதிக்க !!

காதல் தவிர பிற

பாடுபொருள் அறியா

தற்க்கால தமிழ் கவிஞர்களே ,

"காலாவதி" தவறியதா உம் அகராதி ?

 

இஃதிலா  கடவுளர்களும்  இல்லை

காதலென்ன , வெறும் கருமம்  தானே !

காலாவதியின் கரு அறிவான் ஞாணி

அதனின் காலாவதி பகர்பவன் 

கற்பனை புனையும்  கவிஞனே!!

Monday, May 10, 2010

ராவணன் !!

மணி, ரத்தினம், வைரம், முத்து.... 
மேற்கண்ட இந்நான்கும்
இரநிரண்டே தனி சேர்ந்து
பின் அவை இரண்டும் ஒரு சேர்ந்த
பல படைப்பில் வியப்படைந்து, 
புது பரிமாணம் அளிக்குமோ ?? இவர்களின்  தற்கால படைப்பு
என்கிற எதிர்பார்ப்பின் விளிம்பில் !!

Thursday, January 7, 2010

A Cliché !!

 “It’s been long since I have written a post”

       this has almost become a preface for all my recent posts. Blogging is the best  way to organize the data you have in mind. We know, Learning is the process of reading/hearing/visualizing and understanding information. The common misconception is, the process of learning does not end with simply knowing facts and statistics. The real understating begins, as we start organizing the data we have learned. It could be either in our mind or in an external medium. Blogging does this exact transition of  teaching our consciousness about our subconscious learning.

    I think, blogging should be done as and when you feel like expressing something. Failing to do so might dilute the crux of the information you would like to convey. I have a number of scenarios, experiences, and mullings, which flashes in my mind and inspired me to write, but failed miserably to get converted in to post, because of my  immature time management and my nomadic interests.

“Time and Space”, “Science behind booking tickets in IRCTC” ,” Abstraction is amazing” are some of the posts which blossomed and vanished out of my mind before I could find some time to write.

     Instantaneous and micro-blogging tools like Twitter has made blogger’s life easy, obviously by making them lazy. Eventually, It has made some occasional and emerging bloggers impotent. Twitter is good in the way of communicating your thoughts short and quick though its dirty. At the same time, it grabs once opportunity to write a well thought and planned posts by serving a perky way to share your thoughts in Mobile phones.

I know, humans always wanted a scapegoat to blame for their failure. Analyzing my situations make one thing clear for me         

              The need of the hour is “discipline”.